சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சோத்துப்பாறை அணை நிரம்புவதில் தாமதம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

பெரியகுளம் : நீர்பிடிப்பில் மழை பெய்யாததால் சோத்துப்பாறை அணைக்கு நீர் வரத்து இல்லை. இதனால் அணை நிரம்புவது தாமதமாகிறது.

பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ளது சோத்துப்பாறை அணை. கொடைக்கானல் மலைப்பகுதி, சோத்துப்பாறை நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு தண்ணீர் வருகிறது. மொத்த உயரம் 126 அடி.நீர் பிடிப்பில் மழை இல்லாததால் அணை நீர் மட்டம் செப். 12ல் 121.22 அடியாகவும், 4 நாட்களாக நீர் வரத்து வினாடிக்கு 6 அடியாக குறைவு காரணாமாக நேற்று 122.34 அடியாக இருந்தது.19 ஆண்டுகளில் முதல் முறை அணையில் இருந்து 2001 ல் முதன் முறையாக பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது.

இதுவரை அணை நீர்மட்டம் 120 அடியை தாண்டியவுடன் ஓரிரு நாட்களில் நிரம்பி மறுகால் பாயும். மழையில்லாததால் இம்முறை நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அணையால் 2865 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X