பொது செய்தி

தமிழ்நாடு

த போடி, பெரியகுளம் மாணவர்கள் வெற்றி

Added : செப் 17, 2020
Share
Advertisement

போடி : போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்த மாணவர் கோபிகிருஷ்ணன் 18, ஜே.இ.இ., தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவரது தந்தை அழகர்சாமி ஜவுளி வியாபாரம் செய்கிறார். தாயார் ஜெயசுதா குடும்பத் தலைவியாக உள்ளார்.இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் உள்ள தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கான ஜே.இ.இ., மெயின் தேர்வில் 91.75 சதவீதம் மதிப்பெண் பெற்ற கோபிகிருஷ்ணன் கூறியதாவது:பள்ளியில் ஆசிரியர் கற்றுத்தரும் பாடங்களை மனதில் உள்வாங்கி படிப்பேன். பிளஸ் 2 வில் 480 மதிப்பெண்கள் பெற்றேன். பள்ளியில் சிறப்பான முறையில் கற்பித்ததால் ஜே.இ.இ., தேர்வில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது.

இதற்காக தனியாக பயிற்சி வகுப்பில் சேரவில்லை. ஐ.ஐ.டி.,யில் நுழைந்து எலட்ரிக்கல், எலக்ட்ரானிக் பிரிவில் சாதிக்க வேண்டும் என்பது என் விருப்பம், என்றார். தேனி: பெரியகுளம் வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்த மாணவர் தட்சிணாமூர்த்தி 18. தந்தை வீரமணி. தாய் ஈஸ்வரி. இருவரும் தினக்கூலிகள். மாணவர், சமீபத்தில் நடந்த ஐ.ஐ.டி., ஜே.இ.இ., தேர்வில் இந்திய அளவில் 63.78 சதவீதம் மதிப்பெண்ணுடன் தரவரிசை பட்டியலில் 28 ஆயிரத்து 166 இடத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.தட்சிணா மூர்த்தி கூறுகையில், நாட்டின் உயரிய கல்வி நிறுவனத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியாக உள்ளது. படிப்பில் சமூக முன்னேற்றத்திற்காக சாதனை படைப்பேன்,''என்றார். பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், உறவினர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X