பொது செய்தி

தமிழ்நாடு

அய்யலுார் சந்தையில் விலை சரிந்தது தக்காளி

Added : செப் 17, 2020
Share
Advertisement

அய்யலுார் : வரத்து அதிகரிப்பு, புரட்டாசியில் முகூர்த்தங்கள் இல்லாததால் அய்யலுார் மண்டிகளில் தக்காளி கொள்முதல் விலை இறங்கு முகமாக உள்ளது.

கொரோனா துவங்கிய மார்ச்சில் வியாபாரிகள் வராததால் அய்யலுார் மண்டிகளில் 15 கிலோபெட்டி ரூ.50 முதல் 60 வரை ஏலம் போனது.தளர்வுகள் அறிவித்த பின் மேயில் பெட்டி ரூ.500 முதல் 600 வரை விற்றது. ஆவணியில் முகூர்த்தங்கள் துவங்கியதும் பெட்டி ரூ.750 ஆக உயர்ந்தது. தற்போது பெட்டிக்கு ரூ.450 முதல் 500 வரை ஏலம் போகிறது.அய்யலுார் மண்டி உரிமையாளர் எல்.எஸ்.மூர்த்தி கூறுகையில், 'நாளை புரட்டாசி பிறப்பதால் முகூர்த்தம் இல்லாதது, மழை குறைந்து வரத்து அதிகரித்தது போன்ற காரணங்களால் விலை குறைய துவங்கியுள்ளது. கடந்த வாரம் சில்லரை விற்பனையில் கிலோ ரூ.60 வரை விற்ற தக்காளி தற்போது ரூ.30 வரை குறைந்துள்ளது'என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X