பெண் எம்.எல்.ஏ.,வுக்கு சபாநாயகர் எச்சரிக்கை| Dinamalar

பெண் எம்.எல்.ஏ.,வுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (2)
சென்னை:அலைபேசியை பார்த்து பேசிய காங். பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணியை சபாநாயகர் தனபால் எச்சரித்தார்.சட்டசபையில் நேற்று தேசிய கல்விக் கொள்கை தொடர்பான விவாதத்தில் காங்.சார்பில் விஜயதாரணி எம்.எல்.ஏ. பேசினார். அவர் தன் அலைபேசியில் இருந்த குறிப்புகளைப் பார்த்து பேசினார். இதை கண்ட அமைச்சர் தங்கமணி ''சபைக்கு அலைபேசி எடுத்து வரக்கூடாது என சபாநாயகர் உத்தரவிட்டுள்ளீர்கள்.

சென்னை:அலைபேசியை பார்த்து பேசிய காங். பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணியை சபாநாயகர் தனபால் எச்சரித்தார்.



சட்டசபையில் நேற்று தேசிய கல்விக் கொள்கை தொடர்பான விவாதத்தில் காங்.சார்பில் விஜயதாரணி எம்.எல்.ஏ. பேசினார். அவர் தன் அலைபேசியில் இருந்த குறிப்புகளைப் பார்த்து பேசினார்.

இதை கண்ட அமைச்சர் தங்கமணி ''சபைக்கு அலைபேசி எடுத்து வரக்கூடாது என சபாநாயகர் உத்தரவிட்டுள்ளீர்கள். ஆனால் உறுப்பினர் அலைபேசியை பார்த்து பேசுகிறார்'' என புகார் தெரிவித்தார். சபாநாயகர் எம்.எல்.ஏ. விஜயதாரணியிடம் ''நீங்கள் செய்வது தவறு. அலைபேசியை 'சுவிட்ச் ஆப்' செய்யுங்கள். இதுபோன்று இனி செய்யக்கூடாது''என்றார். அதை விஜயதாரணி ஏற்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X