பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : செப் 17, 2020
Share
Advertisement

பாளையத்தில் ஆர்ப்பாட்டம்குஜிலியம்பாறை: பாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ''நீட் தேர்வை ரத்துசெய்யவேண்டும், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக்கூடாது உள்ளிட்டகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாநில துணை செயலாளர் பாலசந்திரபோஸ், ஒன்றியதலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.காதல் ஜோடி தஞ்சம்வடமதுரை: சேணன்கோட்டையை சேர்ந்த விவேகானந்தன் 27, சென்னையில் தகவல் தொழில் நுட்ப துறையில் பணிபுரிகிறார். இவரும் வேடசந்தூர் சவுந்தர்யாவும் 25, சில ஆண்டுகளாக காதலித்தனர். வீட்டினருக்கு தெரியாமல் இருவரும் கோயில் ஒன்றில் திருமணம் முடித்து, வடமதுரை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கோரி தஞ்சம் அடைந்தனர்.

போலீசார் பெற்றோருடன் சமரசம் பேசி அனுப்பினர்.ஆலோசனை கூட்டம்திண்டுக்கல்: திண்டுக்கல்லில் குழந்தைகள் ஆரோக்கியம், தனிநபர் சுகாதாரத்தை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் தெரிவித்தது: மத்திய அரசின் ஊட்டச்சத்து இயக்கம் மூலம் குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகளின் நிலை, அங்கன்வாடி மைய உட்கட்டமைப்பு வசதிகள், புதிய கட்டடங்கள் கட்டுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 2022க்குள் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடம் காணப்படும் குள்ளத்தன்மையை 25 சதவீதமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்வேடசந்துார்: மல்வார்பட்டி பகுதி விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சிமுகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் மோகன்குமார் தலைமை வகித்தார்.துணை வேளாண் அலுவலர் பாலமுருகன் பங்கேற்று புதிய தொழில் நுட்பங்களையும்,நுண்ணீர்பாசனம் பற்றியும் விளக்கினார். விளை பொருட்களின் மதிப்புக்கூட்டுதல் பற்றிய செயல் விளக்கம் நடைபெற்றது. தொழில் நுட்ப மேலாளர் ராஜேந்திரன்நன்றி கூறினார்.

மைதானமான பஸ்ஸ்டாண்ட்திண்டுக்கல்: பழநியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகமானதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கிரிவீதியில் டூரிஸ்ட் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் கோயில்கள் திறக்காததால், 5 மாதங்களாக பக்தர்கள் வரவில்லை. தற்போது பொதுப்போக்குவரத்து தொடங்கியும் பழநிக்கு பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. டூரிஸ்ட் பஸ் ஸ்டாண்ட் சிறுவர்களின் விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது. கழிப்பறைகள், தளங்கள் பராமரிக்கப்படாமல் உள்ளது.

பணிகளை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்வேடசந்துார்: தட்டாரப்பட்டி ஊராட்சி தலைவரை பணி செய்யவிடாமல் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தடுத்து நிறுத்தப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றவும்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடந்தது. தீண்டாமைஒழிப்பு முன்னணி ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் மாவட்டசெயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தற்கொலையில் மூவர் கைதுவத்தலக்குண்டு: கே.உச்சப்பட்டி மணிகண்டன் 43. இவரது கள்ளக் காதலி வீட்டில் பிணமாக துாக்கில் தொங்கினார். சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டம் நடந்தது. ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. கிராமத்தினர் மறுபரிசோதனை கேட்டதால் மணிகண்டன் உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் மணிகண்டன் இறந்த வழக்கில் கள்ளக் காதலி கீதா, மொக்கராஜ், ரவீந்திரன் கைது செய்யப்பட்டனர். ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைத்த வழக்கிலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.பாதயாத்திரைக்கு நடை மேடைதிண்டுக்கல்: மதுரை -- நத்தம், நத்தம் - திண்டுக்கல் சாலைகளில் போக்குவரத்து நெரிசல், வாகன விபத்துக்கள் அடிக்கடி நடக்கும். எனவே, ரூ.800 கோடியில் மேற்கண்ட சாலைகளை 4 வழிச்சாலையாக்கும் பணிகள் நடக்கிறது. தைப்பூசம், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இவ்வழியாக பழநி கோவிலுக்கு ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் வருவர். இவர்கள் வசதிக்காக நத்தம் வழியே திண்டுக்கல் வரை 57 கி.மீ.,க்கு நடைமேடை அமைக்கும் பணி நடக்கிறது. பணியை 3 மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.வாரச்சந்தை திறக்கப்படுமாவடமதுரை: சவுந்தரராஜ பெருமாள் கோயில் அருகில் அறநிலையத்துறையின் வாரச் சந்தை உள்ளது. கொரோனவால் 6 மாதங்களாக மூடிக் கிடக்கிறது. ஆனால் வாரந்தோறும் சனியன்று திண்டுக்கல் ரோட்டில் பலர் கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர். ஊரடங்கு தளர்வு செய்த பின்னும் ரோட்டில் விபத்து ஆபத்துடன் வியாபாரம் நடக்கிறது. சந்தை வளாகத்தில் குறைந்த வியாபாரிகளுக்கு அனுமதி என்ற கட்டுப்பாட்டுடன் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X