சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கையும், களவுமாக சிக்கிய கொள்ளையன்

Added : செப் 17, 2020
Share
Advertisement

நிலக்கோட்டை : நிலக்கோட்டையில் நள்ளிரவில் திருடிக் கொண்டிருந்த கொள்ளையனை போலீசார் கையும், களவுமாக பிடித்தனர்.

நிலக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே சூப்பர் மருந்துக்கடை நள்ளிரவில் திறந்திருந்தது. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கடையை நோக்கிச் சென்றனர். கடைக்குள் இருந்த கொள்ளையன் தப்பியோட முயன்றபோது, சமூக இடைவெளிக்காக கட்டப்பட்டிருந்த தடுப்பால் சிக்கினார்.திருடிய ரூ. 37 ஆயிரம் பணத்தை கைப்பற்றினர். விசாரணையில், அவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி லட்சுமணன் 43. சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை சிறையில் இருந்து விடுதலையாகி உள்ளார். தமிழகம் முழுவதும் இவர் மீது 53 வழக்குகள் நிலுவையில் உள்ளது எனத் தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X