போதை மருந்து சப்ளை விவகாரம் நட்சத்திர தம்பதியிடம் விசாரணை

Added : செப் 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 போதை மருந்து சப்ளை விவகாரம் நட்சத்திர தம்பதியிடம் விசாரணை

பெங்களுரு:போதை மருந்து சப்ளை தொடர்பாக கன்னட நட்சத்திர தம்பதியர் திகந்த் அய்ந்திரிதா ஆகியோரிடம்மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

போதை மருந்து சப்ளை தொடர்பாக கன்னட நடிகையர் ராகினி திவிவேதி, சஞ்சனா கல்ரானி உள்ளிட்ட ஒன்பது பேரை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துஉள்ளனர். மேலும் ஏழு பேரை தேடி வருகின்றனர்.கைது செய்தவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கன்னட நடிகர் திகந்த் மன்சலே அவரது மனைவியும் நடிகையுமான அய்ந்திரிதா ராய் ஆகியோருக்கு குற்றப்பிரிவு போலீஸ் 'சம்மன்' அனுப்பியிருந்தது.

அதன்படி நேற்று பெங்களுருவில் குற்றப் பிரிவு போலீஸ் அலுவலகத்தில் திகந்த் அய்ந்திரிதா ஆஜராகினர். இது குறித்து காவல் துறை இணை கண்காணிப்பாளர் சந்தீப் படேல் கூறியதாவது: திகந்த் அய்ந்திரிதா ஆகியோர் விசாரணைக்கு ஆஜராயினர். அவர்களிடம் போதைப் பொருள் சப்ளை தொடர்பாக பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் விரிவாக பதில் அளித்தனர். அதில் ஏராளமான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

இதற்கிடையே நட்சத்திர விருந்துகளுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக ஆப்ரிக்காவை சேர்ந்த பெனால்டு உதன்னா என்ற முக்கிய புள்ளி கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம், என்றார்.விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த திகந்த் ''போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளோம். மீண்டும் விசாரணைக்கு வரச் சொன்னால்வருவோம் '' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivan - seyyur,இந்தியா
21-செப்-202023:12:52 IST Report Abuse
sivan ஏன் தமிழ் நாட்டில் இதுவரை யாரையும் பிடிக்கவில்லை?
Rate this:
Cancel
Muthu - Nagaipattinam,இந்தியா
21-செப்-202006:59:15 IST Report Abuse
Muthu ஏன்னா ,.... சிங்கம் படக் கதையால்ல இருக்கு?? ஏது?? ஹரியும் சூரியாவும் வரணும் போல..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X