சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடமதுரை அருகே இருவர் தற்கொலை

Added : செப் 17, 2020
Share
Advertisement

வடமதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அருகருகே வசிக்கும் இருவர், திண்டுக்கல் திருமலைக்கேணி கோயில் கிரிவல பாதையில் தற்கொலை செய்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீரேத்தானைச் சேர்ந்த கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர் ஜெயசெந்தில் - மனைவி வித்யா 27, ஆகியோருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அருகில் வசிப்பவர் மணி 33. கேஸ் கம்பெனி ஊழியரான இவருக்கும் திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர்.இருவரும் திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோயிலுக்கு வந்தனர். அங்குள்ள கிரிவல பாதையில் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.வித்யாவின் கணவர் ஜெயசெந்தில் கூறுகையில், ''இருவருக்கும் தொடர்பு இல்லாவிடினும் அவதுாறு விமர்சனம் ஏற்பட்டதால், விரக்தியில் இச்சம்பவம் நடந்துள்ளது' என்றார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X