பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டில் வீணாக செல்லும் குடிநீர்

Added : செப் 17, 2020
Share
Advertisement

நத்தம் : நத்தம் ரோட்டில் குழாய் சேதமடைந்துள்ளதால் குடிநீர் கசிந்து வீணாக செல்கிறது.

ஓராண்டாக திண்டுக்கல் - -நத்தம் ரோட்டில் விரிவாக்கப் பணி நடக்கிறது. ரோட்டின் இரு புறங்களிலும் ஜல்லிக் கற்கள் பரப்புதல், பாலங்கள் கட்டுதல், தடுப்புச்சுவருக்காக பள்ளங்கள் தோண்டுதல் நடந்து வருகிறது.திண்டுக்கல்லில் இருந்து நத்தம் வரை ரோட்டின் இடதுபுறம் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ளது. விரிவாக்க பணிக்காக பள்ளம் தோண்டிய போது பல இடங்களில் குழாய் சேதமடைந்தன. சேதமடைந்த குழாய்களை சீரமைக்கும் பணியும் நடந்தது.

சீரமைத்த பிறகும் ஆங்காங்கே குழாய்களிலிருந்து குடிநீர் கொப்பளித்து வெளியேறி வீணாக செல்கிறது. நேற்று கோபால்பட்டியை அடுத்து நீர் கசிந்து குட்டை போல் தேங்கி நின்றது. குடிநீர் வீணாகாத வகையில் குழாய்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X