அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹிந்தியில் தாவரம் பெயர்: சட்டசபையில் விவாதம்

Added : செப் 17, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை:எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்ட, மூலிகை தாவரங்கள் பட்டியலில், ஹிந்தி இடம் பெற்றது, சர்ச்சையை ஏற்படுத்தியது.

சட்டசபையில் நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: சுகாதாரத் துறை சார்பில், எம்.எல்.ஏ.,க்கள் மேஜை மீது, ஒரு புத்தகம் வைக்கப்பட்டு உள்ளது. இப்புத்தகத்தில், தாவரங்களின் பெயர்கள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. படங்களுடன் அழகாக வெளியிடப்பட்டு உள்ளது.தாவரங்களின் பெயர்கள், தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியிலும் உள்ளது. இது, மும்மொழி திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக அமைந்திருக்கிறதா?

அமைச்சர் விஜயபாஸ்கர்: அ.தி.மு.க., இரு மொழி கொள்கையில், உறுதியாக உள்ளது. இப்புத்தகம், மத்திய அரசின் ஆயுஷ் துறை கீழ் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மூலிகைகளை, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தெரிந்து கொள்வதற்காக, தாவரத்தின் பெயர் ஹிந்தியிலும் இடம் பெற்றுள்ளது. இதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை.

முஸ்லிம் லீக் -- முகமது அபுபக்கர்: இப்புத்தகத்தில், தாவரத்தின் பெயர், ஹிந்தியில் இடம் பெற்றிருப்பது, ஹிந்தி திணிப்பாக உள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர்: இப்புத்தகம், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், மத்திய ஆயுஷ் அமைச்சகம் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்டுள்ளது. ஹிந்தி எழுத்து ஒன்று கூட புத்தகத்தில் இல்லை. மூலிகையின் பெயரை, ஹிந்தியில் எவ்வாறு அழைப்பர் என, ஆங்கிலத்தில் தான் அச்சிடப்பட்டுள்ளது.

தமிழ், தமிழ் என கூறும் தி.மு.க., ஒரு உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியதில்லை. அ.தி.மு.க., தான் நடத்தி உள்ளது.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-202023:03:49 IST Report Abuse
 rajan தீய சக்திகள் நல்ல விஷயங்களை தீயவைகளாகவே நினைக்கும். ஹிந்தி திணிப்பு என்ற வார்த்தையை மூச்சுக்கு மூச்சு இவர்கள்தான் திணிக்கிறார்கள்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-செப்-202013:18:16 IST Report Abuse
Bhaskaran என்ன அப்படி சொல்லிடீங்கா அண்ணா இரண்டாம் உலகத்தமிழ்மாநாடு நடத்தினார் அப்போ பள்ளி மாணவர்களாக எங்க கிட்டே எட்டணா வசூலிச்சு வாயில்போட்டுக்கொண்டாங்க
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-செப்-202001:53:59 IST Report Abuse
தமிழ்வேல் மத்திய அரசின் ஆயுஷ் துறைதான், சித்தாவை கொரோனா விற்கு தடை செய்ததே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X