கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் மீது வழக்கு

Added : செப் 17, 2020
Share
Advertisement

சென்னை:'அரசியல்வாதிகள் போலீசார் வருவாய் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தால் தான் மணல் கொள்ளையை தடுக்க முடியும்' என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மணல் கடத்தல் சம்பவங்களில் கைது செய்யப்பட்ட வாகன ஓட்டுனர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன் வேல்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. டி.ஜி.பி., தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மணல் கடத்தலில் ஈடுபடும் செல்வாக்கு மிக்கவர்களை விட்டு விட்டு சாதாரணமானவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஒரு இடத்தில் மணல் கடத்தல் நடக்கிறது என்றால் அந்தப் பகுதியில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்குமா;

தாசில்தார் வருவாய் துறை அதிகாரிகளுக்கு மணல் கடத்தல் நடப்பது தெரியாதா; கண்டும் காணாமல் இருக்கின்றனரா;மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக அதிகாரிகளுக்கு எதிராக ஏன் வழக்குப் பதிவு செய்யக் கூடாது என அடுக்கடுக்காக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தால் தான் மணல் கொள்ளையை தடுக்க முடியும் எனக்கூறிய நீதிபதிகள் மணல் கடத்தல் வழக்குகளில் அரசியல்வாதிகள் போலீசார் வருவாய் அதிகாரிகள் எத்தனை பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதற்கு அரசு தரப்பில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X