தமிழ்நாடு

ராமேஸ்வரம், கோவைக்கு ரயில்களை இயக்க எதிர்பார்ப்பு ... 6 மாதங்களாக ரயில்களின்றி பயணிகள் அவதி

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020
Share
Advertisement
 ராமேஸ்வரம், கோவைக்கு ரயில்களை இயக்க எதிர்பார்ப்பு ...   6 மாதங்களாக ரயில்களின்றி பயணிகள் அவதி

மதுரை : மதுரையிலிருந்து ராமேஸ்வரம், கோவைக்கு ஆறு மாதங்களாக ரயில்கள் இல்லாததால் தென் மாவட்ட பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

மதுரை ராமேஸ்வரம் இடையே தினமும் மூன்று ரயில்கள் இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கால் மார்ச் 25 முதல் இந்த ரயில்கள் இயக்கப்படவில்லை. கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்திய நிலையில் இதுவரை வழக்கமான ரயில்களை கூட நிர்வாகம் இயக்கவில்லை.கோவைக்கு இயக்கப்பட்ட தூத்துக்குடி, நாகர்கோவில் ரயில்களும் ஆறு மாதங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அகல ரயில் பாதை பணிகளுக்காக நிறுத்தப்பட்ட ராமேஸ்வரம் - கோவை ரயில்களும் இயக்கப்படவில்லை.

மத்திய, மாநில அரசுகள் தளர்வுகள் வழங்கியதையடுத்து சென்னையிலிருந்து மதுரை, காரைக்குடி, தூத்துக்குடி, கன்னியாகுமரிக்கு சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுபோல மதுரையிலிருந்து ராமேஸ்வரம், கோவைக்கு சிறப்பு ரயில்களை இயக்க கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகள் கூறியதாவது: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஏராளமான தென் மாவட்டத்தினர் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். அவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்து செல்ல பஸ்களை மட்டுமே நம்பியுள்ளனர். அகல ரயில் பாதை பணிகள் முடிந்து பல ஆண்டுகளாகியும் கோவைக்கு ரயில்களை இயக்காதது ஏமாற்றமளிக்கிறது.

வழக்கமான ரயில்களை இயக்கும் வரை மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு தினமும் இரு வேளையாவது ரயில்களை இயக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X