'வேறு பகுதியில் கிளை திறப்பதை உச்ச நீதிமன்றம் ஆதரிக்கவில்லை'

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
'வேறு பகுதியில் கிளை திறப்பதை  உச்ச நீதிமன்றம் ஆதரிக்கவில்லை'

புதுடில்லி : டில்லியை தவிர நாட்டின் வேறு பகுதிகளில் கிளை திறப்பதை உச்ச நீதிமன்றம் ஆதரிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் தேங்கியுள்ளன. இதனால் நாட்டின் வேறு பகுதிகளில் உச்சநீதிமன்றத்தின் கிளைகள் திறக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக தென் மாநிலங்களை சேர்ந்த மக்களின் வசதிக்காக சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளை திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.


latest tamil news



லோக்சபாவில் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்தியசட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் எழுத்து மூலம் அளித்த பதிலில், சட்ட கமிஷன் தன் 229 வது அறிக்கையில் 'உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு டில்லியில் அமைக்கப்பட வேண்டும்;

உச்ச நீதிமன்றத்தின் நான்கு கிளைகள் வடக்கு பகுதிக்கு டில்லியிலும் கிழக்கு பகுதிக்கு கோல்கட்டாவிலும் மேற்கு பகுதிக்கு மும்பை யிலும் தெற்கு பகுதிக்கு சென்னை அல்லது ஐதராபாதிலும் அமைக்க வேண்டும்' என பரிந்துரைத்திருந்தது.ஆனால் டில்லியை தவிர நாட்டின் வேறு பகுதிகளில் கிளை திறப்பதை உச்ச நீதிமன்றம் ஆதரிக்கவில்லை, என கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vayalum vazhvum-saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-செப்-202015:36:23 IST Report Abuse
vayalum vazhvum-saravanan பார்லிமென்ட், நீதி துறை மற்றும் தேர்தல் கமிஷன் இந்த மூன்றும் சம அதிகாரம் கொண்டது என்கின்றனர் அதனால் இதில் முடிவு எடுக்கவேண்டியது பற்றி மூவரும் முடிவு செய்யவேண்டும். MGRபற்றி ஒரு செய்தி - பத்திரிகையில் படித்ததாக நினைவு MGRஉடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த பொது ஒரு முக்கிய எடுக்க வேண்டிய கட்டாயம் தலைமை செயலர் அது போற்றிய கோப்பினை முதல்வரிடம் கொடுத்து - கவனமாக படித்து முடிவு எடுக்கும்படி அதில் ஒரு குறிப்பும் எழுதி இருந்தாராம் ஆனால் மக்கள் திலகமோ அதில் தர்மப்படி முடிவு எடுக்கவும் என கையெழுத்திட்டு தலைமை செயலருக்கு அதிகாரம் கொடுத்து கோப்பினை அனுப்பி வைத்தார் என்று ஒரு செய்தி அதனை தற்போதைய அனைவரும் மனதில் கொண்டால் நமது நாடு மிக சிறப்பாக இருக்கும் வந்தே மாதரம்
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
17-செப்-202015:27:10 IST Report Abuse
Darmavan உச்ச நீதியை அரசு ஏன் கேட்க வேண்டும்.தானே முடிவெடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
17-செப்-202015:04:12 IST Report Abuse
r.sundaram இது என்ன இருட்டு அல்வா கடையா என்ன? மக்களின் சௌகரியத்தை பார்க்க வேண்டுமே அன்றி வேறு ஒன்றும் இதற்க்கு வேண்டாம். குமரி மாவட்டத்தில் உள்ளவர் உச்சநீதிமன்றம் போக வேண்டுமானால் என்ன செய்வார் பாவம், எத்தனை தூரம், பயண செலவு என்ன, பயண நேரம் என்ன, இதெல்லாம் உச்சநீதிமன்றத்துக்கு தெரியாமலா இருக்கும்? பல உயர் நீதி மன்றங்களுக்கு கிளைகள் இருக்கிறதே ஏன்? உச்சநீதி மன்றத்திற்கு சென்னையில் ஒரு கிளை அமைப்பதே நன்று.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
18-செப்-202000:12:47 IST Report Abuse
தல புராணம்ஏன் சென்னையில் அமைக்க வேண்டும்? கன்னியாகுமரியில் ஏன் வைக்க கூடாது ?? இல்லை திருச்சியில் ??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X