பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 19,900 பேர் நலம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

கோவை:கோவை, அரசு மருத்துவமனையை சேர்ந்த இரு பயிற்சி மருத்துவர்கள், பி.ஆர்.எஸ்.,காவலர் குடியிருப்பை சேர்ந்த 36 வயது ஆண் போலீஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. செல்வபுரத்தில் 59 பேர், மேட்டுப்பாளையத்தில் 29 பேர், வெள்ளக்கிணறில் 22 பேர், ராமநாதபுரம், துடியலுாரில் தலா 16 பேர், சிங்காநல்லுார், சூலுார், காரமடையில் தல 15 பேர், கணபதி 14 பேர், காந்திபுரத்தில் 14 பேர், பீளமேடு, பி.என்.பாளையத்தில் தலா 10 பேர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 549 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த தொற்று எண்ணிக்கை 23 ஆயிரத்து 702 ஆக உயர்ந்தது.கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பேர் நேற்று உயிரிழந்தனர். மொத்த பலி 365 ஆக உயர்ந்தது.அரசு மருத்துவமனை இ.எஸ்.ஐ., தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு மையங்களில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த, 707 பேர் ஒரே நாளில் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 900 ஆக உயர்ந்தது. தற்போது, 3,437 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X