பொது செய்தி

தமிழ்நாடு

சீன ஆயத்த ஆடை ஏற்றுமதி சரிவு: தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்பு

Added : செப் 17, 2020
Share
Advertisement

கோவை:''அமெரிக்காவுக்கான சீனாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி பாதியாக குறைந்துள்ளது. ஏற்றுமதிக்கான இந்த வாய்ப்பை, நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐடிஎப்) தெரிவித்துள்ளது.ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியுள்ளதாவது: அமெரிக்க ஆயத்த ஆடை சந்தையில், சீனாவின் ஆதிக்கம், இரண்டு ஆண்டுகளாகவே குறைய தொடங்கியுள்ளது. 2019ல் இது 20 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. கொரோனா தொற்றால், அமெரிக்காவின் ஆயத்த ஆடை இறக்குமதி 30 சதவீதம் சரிந்தது. சீனாவின் ஏற்றுமதி 49 சதவீதம், அதாவது பாதியாக குறைந்தது. இது பிற நாடுகள் ஏற்றுமதி செய்ய வாய்ப்பாக அமைந்துள்ளது.இந்தியாவில் உள்ள கிளஸ்டர்களும், தொழில் நிறுவனங்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் ஏற்றுமதியை வேகமாக உயர்த்த முடியும். ஐரோப்பிய யூனியனுக்கு வியட்நாம் வரி இல்லாமல் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை பெற்றிருப்பதால், இந்தியா கடும் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும். இந்தியா, வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளுக்கு ஒரே மாதிரியான வரிவிதிப்பு உள்ளதால் சந்தை போட்டியை சமாளிக்க முடியும். ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், அமெரிக்க சந்தையில் முழு கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X