பொது செய்தி

தமிழ்நாடு

பாரதியார் பல்கலையில் 'ஆன்லைன்' மாதிரி தேர்வு: 30 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

Added : செப் 17, 2020
Share
Advertisement

கோவை:பாரதியார் பல்கலை சார்பில், இறுதியாண்டு மாணவர்களுக்கு நடத்திய, 'ஆன்லைன்' மாதிரி தேர்வில், 30 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.
கொரோனா காரணமாக இறுதியாண்டு மாணவர்களுக்கான 'செமஸ்டர்' தேர்வுகள், ஆன்லைனில் வரும், 21 முதல், 30ம் தேதிக்குள் நடத்தப்படும் என, அட்டவணை வெளியிடப்பட்டது. 'ஆன்லைன்' தேர்வு குறித்து மாணவர்களின் சந்தேகங்களை போக்கும் வகையில், நேற்று மாதிரி தேர்வு நடந்தது.இத்தேர்வில் மாணவர்கள் வீடுகளில் இருந்தே பங்கேற்றனர். காலை, 9.30 மணியளவில் தேர்வு துவங்கியது.
வினாத்தாளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து, விடையளிக்க துவங்கினர். பகல் 12.45 மணி வரை மாணவர்கள் விடையளிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டது.இதன்பின், 45 நிமிடங்கள் மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை 'ஸ்கேன்' செய்து, ஆன்லைன் போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. 'ஆன்லைன் போர்ட்டலில்' இருந்து வினாத்தாளை பதிவிறக்கம் செய்த மாணவர்கள், 'ஏ4' ஷீட்டில் பதில்களை எழுதினர். இதில், 5 மதிப்பெண், 10 மதிப்பெண், 20 மதிப்பெண் வினாக்கள் இடம்பெற்றிருந்தன. இறுதியில் தாங்கள் எழுதிய விடைத்தாள்களை மாணவர்கள் 'ஸ்கேன்' செய்து குறிப்பிட்ட அளவு மற்றும் வடிவில் ஆன்லைன் போர்ட்டலில் பதிவேற்றம் செய்தனர்.
மாதிரித் தேர்வில், 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.'வாட்ஸ் ஆப் குழு'பாரதியார் பல்கலை துணைவேந்தர் காளிராஜ் கூறுகையில், ''செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள, இது பயிற்சியாக இருக்கும். ஆன்லைன் தேர்வில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால், அதை சரிசெய்ய, 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களுக்கு தேவையான உதவி செய்து தருவர். இதற்காக, 'வாட்ஸ்ஆப்' குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேமுறையில், வரும், 30ம் தேதிக்குள் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்கப்படும். எம்.பி.ஏ., மாணவர்களுக்கு, அக்., 7ம் தேதிக்குள் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும்,'' என்றார்.
தபாலில் விடைத்தாள்கள்!
'ஆன்லைன்' முறையில் தேர்வு எழுதும் மாணவர்கள், தாங்கள் எழுதும் விடைத்தாள்களை, 'ஸ்கேன்' செய்து குறிப்பிட்ட நேரத்துக்குள் போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன்பின், தங்களது விடைத்தாள்களை அந்தந்த மையங்களுக்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். விடைத்தாள் திருத்தம் செய்யும்போது, ஆன்லைனில் பதிவேற்றம் செய்தது மட்டும் தான் ஏற்று கொள்ளப்படும். தபாலில் அனுப்பப்படும் விடைத்தாள்கள், ஒப்பீடு செய்ய மட்டும் தான் பயன்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லுாரிகளும் தயார்!ஆன்லைன் தேர்வு முறைக்கு இணையதள வசதி இன்றியமையாதது. ஆனால், வால்பாறை, கூடலுார் போன்ற சில இடங்களில் இணையதள வசதி குறைபாடுகள் உள்ளன. இதனால், இதுபோன்ற இடங்களில் அமைந்துள்ள கல்லுாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒருவேளை இணையதள வசதி இல்லாத நிலையில் மாணவர்கள் கல்லுாரிக்கு வரவழைக்கப்பட்டு 'ஆன்லைன்' தேர்வில் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X