பொது செய்தி

தமிழ்நாடு

இலங்கை தாதா உடலில் விஷம் இல்லை: ஆய்வக பரிசோதனையில் தகவல்

Added : செப் 17, 2020
Share
Advertisement

கோவை:இலங்கை தாதா விஷம் வைத்து கொல்லப்படவில்லை என, ஆய்வக முடிவுகளில் தெரியவந்துள்ளது. இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா கோவையில், பிரதீப் சிங் என்ற பெயரில், 2018 முதல் வசித்து வந்தார்.
இவர் ஜூலை 3ம் தேதி உயிரிழந்த நிலையில்,மதுரையில் உடல் தகனம் செய்யப்பட்டது.அங்கொட லொக்கா மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால், பிரேதப் பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட உடல் உள்ளுறுப்புகளை ரசாயன பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டது. சென்னையில் உள்ள ஆய்வகத்தில் இதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி., சங்கர் கூறுகையில்,''ஆய்வக முடிவுகள் கிடைத்துள்ளன. இதன்படி, அவருக்கு விஷம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பது தெரிந்துள்ளது. எனவே, அவரது இறப்பு மாரடைப்பால் ஏற்பட்டு இருக்கலாம். மற்றபடி, அவரது டி.என்.ஏ., முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை. டி.என்.ஏ., முடிவுகள் கிடைத்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X