பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் சூர்யாவுக்கு கண்டனம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

கிணத்துக்கடவு:''நடிகர் சூர்யாவை தவறான சிந்தனையில் இருந்து, நடிகர் சிவக்குமார் நல்வழிபடுத்த வேண்டும்,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார்.கோவை கிணத்துக்கடவில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:காங்., ஆட்சியில், தி.மு.க., அமைச்சரவையில் அங்கம் வகித்தபோது, 'நீட்' தேர்வு கொண்டு வரப்பட்டது. இத்தேர்வு, தமிழகத்தில் மட்டுமல்ல; கம்யூ., ஆட்சி செய்யும் கேரளாவிலும், காங்., ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் நடந்துள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் கேள்விகள் எளிமையாக இருந்ததாக தெரிவித்தனர்.நடிகர் சூர்யா, மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். அதை விடுத்து தவறான சிந்தனையை மாணவர்களுக்கு திணிக்க கூடாது. இதை, அவரது தந்தையான நடிகர் சிவக்குமார் கண்டித்து, நல்வழிப்படுத்த வேண்டும். சூர்யா திருந்தாவிட்டால், அவரை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X