பொது செய்தி

தமிழ்நாடு

164 நாட்களுக்குப் பிறகு மஸ்கட் சென்ற பயணிகள்

Added : செப் 17, 2020
Share
Advertisement

பெருங்குடி : மதுரையிலிருந்து 164 நாட்களுக்குப் பிறகு 120 பயணிகள் விமானம் மூலம் நேற்று மஸ்கட் சென்றனர்.

பல்வேறு மாவட்டத்தினர் துபாய்க்கு வேலைக்கு சென்றனர். கொரோனா தடை உத்தரவால் அவர்களால் தாயகம் திரும்ப இயலவில்லை. மத்திய அரசு அறிவித்த தளர்வுகளால் சில மாதங்களாக வெளிநாடுகளில் இருந்து வந்தே பாரத் திட்டம், தனியார் விமானங்களில் ஆயிரக்கணக்கானோர் தமிழகம் திரும்பினர்.துபாயில் இருந்து நேற்று 130 பயணிகள் மதுரை திரும்பினர். சுகாதாரத் துறையினர் கொரோனா தொற்று பரிசோதனை செய்து வீடுகளில் தனிமைப்படுத்திட அறிவுறுத்தினர். அதே விமானத்தில் 120 பேர் 164 நாட்களுக்கு பிறகு மதுரையில் இருந்து மஸ்கட் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X