சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நான்கு வழிச்சாலைக்காக அழிக்கப்படும் கால்வாய்

Added : செப் 17, 2020
Share
Advertisement

மேலுார் : மேலுார் அருகே தனியாமங்கலத்தில் நான்கு வழிச்சாலை அமைக்க பெரியாறு பாசன கால்வாயை அழிப்பதாக கூறி தேசிய நெடுஞ்சாலை துறையினரை விவசாயிகள் முற்றுகையிட்டனர்

மேலூர் - காரைக்குடி ரோடு 49 கி.மீ.,க்கு 200 மீட்டர் அகலத்தில் நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்காக தனியாமங்கலம்-கீழவளவு செல்லும் 10 வது பிரிவு கால்வாயில் இருந்து பிரியும் 6 கிளை கால்வாய்களை அழிப்பதால் 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தரிசாகும். மெயின் ரோட்டையும் மண் கொட்டி அழித்து விட்டனர். ஆத்திரமுற்ற விவசாயிகள் மணல் வண்டிகளை மறித்தனர். நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளர்கள் பூபாலன், சரவணனையும் முற்றுகையிட்டனர்.விவசாயி சரவணன் கூறுகையில்,''கால்வாய் அழிப்பால் விளை நிலங்கள் தரிசாகும்.

மீண்டும் கால்வாய்கள் மற்றும் பாலம் அமைத்து தரக்கோரியும் நடவடிக்கை இல்லை,'' என்றார்.திட்ட மேலாளர் பூபாலன் கூறுகையில்,''அதிகாரிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X