பொது செய்தி

தமிழ்நாடு

வசிப்பிடங்களில் வகுப்பறைகள்: ஆசிரியர்கள் அசத்தல்

Added : செப் 17, 2020
Share
Advertisement

மதுரை : கொரோனாவால் வீட்டில் முடங்கிய மாணவர்களுக்கு கல்வி கேள்விக்குறியான நிலையில் மாணவர்களின்இருப்பிடங்களுக்கு சென்று வகுப்பறை சூழலை உருவாக்கி கற்பித்தல் பணியை தொடர்கின்றனர் .

மதுரை திருஞானம் துவக்க பள்ளி ஆசிரியர்கள்.கொரோனாவால் தற்போது ஆன்லைன், இணையவழி மற்றும் கல்வித் தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டாலும் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அலைபேசி, இணைய வசதி இல்லாத மாணவர்கள் பலர் உள்ளனர். திருஞானம் பள்ளிகளில் படிக்கும் அலைபேசி இல்லாத மாணவர்கள் நலன் கருதி சிந்தாமணி, அனுப்பானடி, பனையூர், வண்டியூர் பகுதிகளுக்கு ஆசிரியர்கள் சுழற்சி முறையில் சென்று தினமும் பாடம் நடத்துகின்றனர். மாணவர்களுக்கு முககவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கியும், வெப்ப நிலையை பரிசோதித்தும் அனுமதிக்கப்படுகின்றனர்.

பள்ளி தலைமையாசிரியர் சரவணன் கூறியதாவது: மாணவர்கள் நீண்ட நாட்களாக விடுமுறையில் உள்ளதால் கல்வி நலனை கருதி வீடுகள் நோக்கி ஆசிரியர்கள் செல்கிறோம். மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கிய நிலையில் அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்துகிறோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X