பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயத்தில் மாற்றம் காலத்தின் கட்டாயம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

மதுரை : ''விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் மாற்றத்தை கொண்டு வருவது காலத்தின் கட்டாயம்,'' என, மதுரையில் நபார்டு அக்ரிபிசினஸ் இன்குபேஷன் மைய கட்டடத்தை திறந்து நபார்டு வங்கி தலைவர் சிந்தாலா தெரிவித்தார்.

விவசாய கல்லுாரியில் நடந்த கட்டட திறப்பு விழாவில் டீன் பால்பாண்டி வரவேற்றார். வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார் தலைமை வகித்து பேசுகையில், ''புதுமையும் தொழில்முனைவுத் திறனும் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும். மூன்றாண்டுகளுக்கு முன், இக்கல்லுாரியில் ஆரம்பிக்கப்பட்ட நபார்டு இன்குபேஷன் சென்டரானது அறுவடை தொடங்கி மார்க்கெட்டிங் வரை விவசாயிகளுக்கு தேவையான அனைத்து விஷயங்களுக்கும் துணைநிற்கிறது,'' என்றார்.

நபார்டு தலைவர் சிந்தாலா பேசுகையில்,''விவசாயத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள், மார்க்கெட்டிங் உத்திகளை விவசாயிகள் தனியாக, குழுவாக கற்றுக் கொள்வதன் மூலம் லாபம் ஈட்டலாம்.இதன் மூலம் விவசாயிகள் தற்சார்பு நிலையை அடையமுடியும். விவசாயிகள் தற்சார்பு நிலையை அடைந்தால் இந்தியா தற்சார்பு நிலையை அடைந்தது போலாகும்,'' என்றார்.பயனடைந்தவர்கள் குறித்த கையேடு வெளியிடப்பட்டது. நபார்டு முதன்மை பொது மேலாளர் செல்வராஜ், லீட் எக்ஸ்பர்ட் சுந்தரம், கே.பி.ஆர். குழுமத் தலைவர் ராமசாமி, ஜோேஹா சி.இ.ஓ., ஸ்ரீதர் வேம்பு பங்கேற்றனர். இயக்குனர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X