பொது செய்தி

தமிழ்நாடு

காலமுறை சம்பளம் வழங்க கிராம உதவியாளர் கோரிக்கை

Added : செப் 17, 2020
Share
Advertisement

மதுரை : 'தமிழக அரசு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்' என, மதுரையில் நடந்த வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது.

மாநில தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். பிரசார செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் தமிழ்செல்வன் கோரிக்கைகளை விளக்கினார். அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் ஜெயராஜராஜேஸ்வரன், கல்யாணசுந்தரம், நெடுஞ்சாலைத்துறை சங்க நிர்வாகி பிரபாகரன், சத்துணவு சங்க செயலாளர் சோலையன், நிர்வாகிகள் சாக்ரடீஸ், கரந்தமலை உள்ளிட்டோர் பேசினர்.

பொருளாளர் கோவிந்தன் நன்றி கூறினார்.ஓய்வூதியம் வழங்க வேண்டும். ரூ.15,700 அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும். வி.ஏ.ஓ., பதவி உயர்வு பட்டியல் வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X