எல்லைப் பாகுபாடு காட்டாமல் அனைவரும் ஒன்றிணைவோம்- ஐரோப்பிய யூனியன் தலைவர் உரை

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கொரோனா ஒழிப்புக்காக கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. இதில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.



latest tamil news



ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சாலா வான் டேர் லயன், கொரோனா விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார். ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளிடையே உள்ள பிரச்னைகளை நீக்குவது நமது தலையாய கடமை என தெரிவித்தார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ஐரோப்பிய மருத்துவ ஏஜென்சி மற்றும் ஐரோப்பிய நோய்த்தடுப்பு மையம் ஆகியவற்றை மீண்டும் பணி செய்ய உத்தரவிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் உயிரியல் ஆராய்ச்சிக்காக பார்டா எனப்படும் அமைப்பை உருவாக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளில் சில பணக்கார நாடுகளும் உள்ளன. இதில் இத்தாலியும் ஒன்று.


latest tamil news



இதுபோன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் உதவியுடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு உதவ ஐரோப்பிய யூனியன் ஆவண செய்யும் என அவர் தெரிவித்தார். மருத்துவரான வான், கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து பேசுகையில் நோய் தடுப்புக்காக அனைத்து நாடுகளும் பாகுபாடின்றி ஒன்றிணைய வேண்டும் என்றும் சுயநலத்துக்கு இது நேரமல்ல, ஐரோப்பிய யூனியன் நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்பட்டால்தான் இதனை முழுவதுமாக ஒழிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
17-செப்-202013:29:43 IST Report Abuse
Ramesh Sargam தீவிரவாதம் ஒழிந்தால் நாடுகள் ஒன்றிணைய வாய்ப்புண்டு.
Rate this:
Cancel
17-செப்-202008:34:22 IST Report Abuse
ஆப்பு வேற்று கிரக வாசிகள் தாக்கினால் ஒழிய நாடுகள் பாகுபாடுகளை மறந்து ஒத்துழைப்பது நடவாத காரியம்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-செப்-202008:14:30 IST Report Abuse
Lion Drsekar "அனைத்து நாடுகளும் பாகுபாடின்றி ஒன்றிணைய வேண்டும் என்றும் சுயநலத்துக்கு இது நேரமல்ல" இதை எல்லா துறை மற்றும் மனித வளத்துக்கும் பயன்படுத்தினால் இந்த உலகை இன்னமும் சிலகாலம் காப்பாற்றலாம், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X