சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கீழே கிடந்த பணத்தை எடுத்ததில் தகராறு

Added : செப் 17, 2020
Share
Advertisement

நடுவீரப்பட்டு; சி.என்.பாளையத்தில் கீழே கிடந்த பணத்தை எடுத்த தகராறில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.சி.என்.பாளையம் சொக்கநாதன்பேட்டையை சேர்ந்தவர் முத்துபாவாடை,61; அதே பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார்,35; முத்துபாவாடையின் வீட்டின் அருகில் கிடந்த பணத்தை முத்து பாவாடை மகன் மணிமாறன்,21; எடுத்தார். இந்த பணம் தன்னுடையது என கூறி மணிமாறனிடம் சசிக்குமார் தகராறு செய்தார். இதை தடுத்த முத்துபாவாடை, அவரது மாமியார் அஞ்சலையையும் தாக்கினார். இதில் காயமடைந்த இருவரும் கடலுார் அரசு மருத்துவ மனையில் சேர்ந்தனர்.இது குறித்து முத்துபாவாடை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சசிக்குமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X