கோவில் நிலங்களுக்கு குத்தகைக்கான ஏலம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் நிலங்களுக்கு குத்தகைக்கான ஏலம்

Added : செப் 17, 2020
Share

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனுார் கோவில் நிலங்களுக்கு குத்தகைக்கான ஏலம் சுமூகமாக முடிந்தது.நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்த கோவிலுக்கு சொந்தமான 26 ஏக்கர் நிலத்தின் குத்தகைக்கான ஏலம் செயல் அலுவலர் மகாதேவி முன்னிலையில் நடந்தது. இந்த ஏலங்களில் பிரச்னை ஏற்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று செயல் அலுவலர் மகாதேவி தலைமையில் மூன்றாவது முறையாக ஏலம் நடந்தது. இதில் தற்போது குத்தகைக்கு வைத்திருப்பவர்கள் மட்டும் கலந்து கொண்டு கடந்த ஆண்டை விட 15 சதவீதம் அதிக தொகைக்கு ஏலம் எடுத்தனர். இனி கோவில் நிலங்களுக்கான ஏலம் நடக்கும் முன் விளம்பரம் செய்தால் பல மடங்கு கூடுதலாக வருவாய் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X