பொது செய்தி

தமிழ்நாடு

தியாகி ராமசாமி படையாச்சியார்சிலைக்கு மாலை அணிவிப்பு

Added : செப் 17, 2020
Share
Advertisement
 தியாகி ராமசாமி படையாச்சியார்சிலைக்கு மாலை அணிவிப்பு

பரங்கிப்பேட்டை; சுதந்திர போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியார் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் அவரது சிலைக்கு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட தியாகி ராமசாமி படையாச்சியார் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சட்டம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் சண்முகம், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ, தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் கழக தலைவர் வளர்மதி, கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ., க்கள் பங்கேற்று மாலையணிவித்து, மரியாதை செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X