பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., கல்வியாளர் அணி சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா

Added : செப் 17, 2020
Share
Advertisement

புவனகிரி; புவனகிரியில் பா.ஜ., கல்வியாளர் அணி சார்பில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டிக் கொண்டாடினர்.நிகழ்ச்சிக்கு கல்வியாளர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் அகத்தியர்மெய்கண்டதேவன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜி வரவேற்றார். கல்வியாளர் பிரிவு மாவட்டத்துணைத் தலைவர் சுரேஷ், மாவட்ட செயலர்கள் மகேஸ்வரன்,கல்யாணசுந்தரம், மாவட்ட துணைத் தலைவர்கள் புவனைவெற்றிவேல்,ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் இளஞ்செழியன் சிறப்பு விருந்தினராக கல்வியாளர் பிரிவு அலுவலகத்தை திறந்து வைத்து, மோடி பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் சந்திராகுணசேகரன், பொது செயலர் ராஜேஷ், கல்வியாளர் பிரிவு மாவட்டத் தலைவர் நாகேஸ்வரபாபு பங்கேற்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜன், கட்சி நிர்வாகிகள் ராமநாதன், புவனை தியாகு, சக்திவேல், கணேசன்,திருக்குமரன்,வேணுகோபால்,பாலுத்தங்கரை சுந்தரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கல்வியாளர் பிரிவு ஒன்றிய தலைவர் தமிழ்க்குமரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X