பொது செய்தி

இந்தியா

உலகின் நீளமான சுரங்கம் 10 ஆண்டுகளில் நிறைவு

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement

மணாலி: ஹிமாச்சல பிரதேசத்தில், இரு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில், உலகின் மிக நீளமான சுரங்கப் பாதை, 10 ஆண்டுகளில் முடிவுக்கு வந்து உள்ளது.



latest tamil news



ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர், ஜெய்ராம் தாக்கூர் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது.இம்மாநிலத்தின் மணாலியில் இருந்து, லே நகருக்கு செல்லும் நெடுஞ்சாலையில், 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது 9.02 கி.மீ., நீளம் கொண்டது, உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள, மிக நீளமான சுரங்கம் ஆகும்.

இது குறித்து, இப்பணிகளின் தலைமை பொறியாளர், கே.பி.புருஷோத்தமன் கூறிய தாவது:இந்த சுரங்கப்பாதை, ஆறு ஆண்டுகளுக்குள் உருவாக்க திட்டமிட்டு, 10 ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ளது. இதனால், மணாலியில் இருந்து லே செல்லும் துாரத்தில், 46 கி.மீ., குறைவதுடன், நான்கு மணி நேர, பயண நேரம் சேமிக்கப்படும்.'அடல்' என, பெயரிடப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையில், ஒவ்வொரு, 60 மீட்டர் இடைவெளியில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


latest tamil news


ஒவ்வொரு, 500 மீட்டர் துாரத்திலும், அவசர கால வெளியேறும் வழி அமைந்துள்ளது.சுரங்கப்பாதையின் அகலம், 10.5 மீ., என்ப துடன், இருபுறமும் தலா, 1 மீட்டர் அகல நடைபாதை உள்ளது. சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை, பல்வேறு சிரமங்களுக்கு இடையே, வெற்றிகரமாக முடித்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vayalum vazhvum-saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-செப்-202014:27:29 IST Report Abuse
vayalum vazhvum-saravanan நமது தமிழர்கள் , ஜப்பான் வரலாறு படித்தால் நன்றாக இருக்கும் , அதாவது நேர்மறை எண்ணம் எப்பவும் நம்மை முன்னேற்றும் என்பதற்கு அதில் நிறைய நல்ல கருத்துக்கள் உள்ளது , நான் அதனை எனது பள்ளி பருவத்தில் 9ஆம் வகுப்பு வரலாறு பாட புத்தகம் என நினைக்கிறன், இன்றும் எனக்கு நன்றாக நினைவு உள்ளது, அதனை ஒரு கதையாக படித்தேன் இன்னமும் அதனை எனது வாழ்க்கையில் அதனை முன் உதாரணமாக கொண்டு வாழ்கிரேன் பதினெட்டாம் நூற்றண்டில் நடந்த வரலாற்று சம்பவம் ஜப்பானில் மிகடாவினர் - அரச வம்சம் அவர்களை ஜப்பனீயர்கள் சூரிய வமிசத்தவர் என நம்பிக்கை கொண்டுள்ளனர் இன்னமும் மன்னரை முன்னிலை படுத்தும் அரசு தான் அங்கு நடக்கிறது ஷோகன் என்ற வம்சம் (படை தளபதிகள்) அரசரை கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்தினார்கள் அதாவது பெயருக்குத்தான் அரசர் மற்றபடி அதிகாரம் முழுக்க படைத்தளபதியின் கையில் தான்... இந்த காலகட்டத்தை ஜப்பானின் தனிமை காலம் என்பார்கள், அதாவது ஜப்பான் nadum , நாட்டு மக்களும் எந்த நாட்டுடனும் தொடர்பு கொள்ளாமல் தனிமையை விரும்பி வாழ்ந்தனர் அந்த சமயத்தில்தான் அமெரிக்கா ஜப்பானுடன் வணிகம் செய்ய விரும்பியது. ஷோகன்கள் வேறு வழி தெரியாமல் அதற்கு அனுமதி கொடுத்தனர் அதனை தொடர்ந்து ஐரோப்பியர்கள் அனைவரும் வணிகம் செய்ய ஆரம்பித்தனர், அது மட்டுமில்லாமல் ஜப்பானிய மக்களின் அரசியல் மற்றும் சமூகத்திலும் தலையிட ஆரம்பித்தனர். இது ஜப்பானிய மக்களுக்கு பிடிக்காமல் புரட்சி செய்து ஆட்சியை மன்னரிடம் கொடுத்தனர். மன்னர் மக்களிடம் நிலைமையை எடுத்து கூறினார் அதாவது மக்களுக்கு கால மாற்றத்தை எடுத்துரைத்தார், அதாவது இனிமேல் வணிகத்தை நிறுத்த இயலாது ஆனால் அதனை நமக்கு சாதகமாக மாற்ற வேண்டும் எனக்கூறினார்.. மேலும் அதனை எப்படி மாற்றிகொள்வது என எடுத்து கூறினார். தேச பக்தி கொண்ட ஜப்பானியர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர் அதன்படி எல்லாரையும் படிக்க வைத்தார் நிறைய thozhil நுட்பம் கற்றுக்கொள்ள வசதியாக மக்களை அமெரிக்கா ஐரோப்பாவிற்கு அனுப்பி வைத்தார், குறைந்த காலத்தில் ஜப்பானை முன்னேற்றினார் இந்த samayththil தான் சீனாவும், ரஷ்யாவும் ஜப்பானை தாக்கினார்கள், அவர்களை திருப்பி அடித்த ஜப்பான் அவர்களின் பெரும் பகுதியை தனதாக்கியது மேலும் இரண்டாம் உலக போருக்கு பின்னரும் இதே போல முன்னுக்கு வந்தது ( அதனை பற்றி சொன்னால் இன்னமும் பதிவு பெரியதாகும் தயவுசெய்து அதனை படித்து தெரிந்துகொள்ளுங்கள் ) தற்போது நாமும் நமது நாட்டின வளத்தை பயன்படுத்தி அரசியல் தவிர்த்து முன்னுக்கு வர பயன் படுத்தலாம் , நம்மிடம் திறமை உள்ளது ஆனால் வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது அதனை சரி செய்ய பல விஷயங்களை கற்க வேண்டும், அதில் ஒன்றுதான் ஹிந்தி மொழியும் , நம்மிடம் உள்ள காய்கரிகள் மற்றும் உற்பத்தி பொருட்களை விற்க வாங்க மொழியும் அவசியம், இசுலாமியர்களின் மொழி அறிவு அவர்களை வணிகத்தில் சிறப்புற செய்கிறது அதேபோல நாமும் நமக்கு வேண்டியதை கற்போம் முன்னுக்கு வருவோம் ஜெய்ஹிந் வந்தே மாதரம்
Rate this:
venkata achacharri - india,இந்தியா
18-செப்-202009:05:48 IST Report Abuse
venkata achacharri நல்ல கருத்து அனல் அது கடைசியில் ஹிந்தி திணித்துவிட்டார் நமது அண்டை மாநிலத்தில் வியாபாரம் செய்ய மலையாளம் தெலுகு கன்னட பொறந்த தமிழை போல உள்ள மோகிகளே போதுமே எல்லாரும் என் துபையிலே வியாபாரம் சிஏய ஹிந்தி படிக்கவேண்டும்தமிழ் நாட்டில் ஹிந்தி படிக்காமேலேயே நீங்க்கள் இப்போது துபையில் வியாபாரம் செய்யவில்லயே தேவை என்றால் எல்லாம் தானாக வரும் அதற்க்கு எல்லோரையும் கட்டயப்படுத்த வேண்டுமா...
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
17-செப்-202011:27:28 IST Report Abuse
konanki நல்ல வேளை இந்த சுரங்கப் பாதை பானிபூரி பீடா வாயன் ஹிந்தி பேசும் ஹிமாச்சல் பிரதேசத்தில் இருந்ததால் இது நடந்தது. இதுவே தமிழகத்தில் போட வேண்டி இருந்தால் எதிரி கட்சிகள் சேனல்கள் நெறியாளர்கள் சமூக ஆர்வலர்கள் என்கிற பெயரில் இருக்கும் கட்சி காரர்கள் இடது சாரி சிந்தனையாளர்கள் அறிவு ஜிவிகள் அர்பன் நக்ஸல்கள் எல்லாம் சேர்ந்து ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தி இந்த சுரங்கப் பாதை வர விடாமல் செய்து இருப்பாங்க.
Rate this:
17-செப்-202014:55:05 IST Report Abuse
பாமரன்இந்தியாவிலேயே நான்கு வழி சாலைகளின் அடர்த்தி தமிழ் நாட்டில் தான் அதிகம். மக்களின் ஒத்துழைப்பு இல்லாமலா இவையெல்லாம் வந்தது? அதேபோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாநிலமும் தமிழ் நாடு தான். இதெல்லாம் கடந்த இருபது ஆண்டுகளில் வந்தவை....
Rate this:
sunder - chennai,இந்தியா
17-செப்-202015:23:31 IST Report Abuse
sunder, நான்கு வழி சாலைகளின் அடர்த்தியில் நாம் ஏழாவது இடத்தில உள்ளோம். முதலில் மராட்டியம் (15437 KM), உபி (8711KM), ராஜஸ்தான் (7906 km), மபி (7884KM), கர்நாடகா (6761 km), ஆந்திரா (6286 KM). நம் மாநிலம் 5,381 கிமி தான்....
Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
17-செப்-202016:23:35 IST Report Abuse
பாமரன்சுந்தர்... உங்கள் புரிதலில் தவறு... நீங்க குறிப்பிட்டிருப்பது மொத்த சாலைகளின் நீளம்..... நான் சொன்னது மொத்த தேசிய நெடுஞ்சாலைகளில் நான்கு வழியாக்கப்பட்ட சாலைகளின் அடர்த்தி மற்றும் மாநிலத்தின் பரப்பளவுக்கு எதிரான நான்கு வழி சாலைகளின் அடர்த்தி... ஒரு எளிய உதாரணம்... எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் மட்டுமே எந்த மூலையிலும் சென்று நின்று கொண்டு பக்கத்தில் நான்கு வழி சாலை எங்குள்ளதுன்னு தேடினால் ஐம்பது அல்லது அதிகபட்சம் நூறு கிலோமீட்டருக்கு கிடைத்துவிடும்... (மலைவாசஸ்தலங்களை தவிர...) அதேபோலத்தான் ஏர்போர்டுகளும்... வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அடர்த்தி இது... இவையெல்லாம் மக்கள் ஒத்துழைப்பு இல்லாமலா வந்ததுன்னு தான் கேட்டிருந்தேன்.......
Rate this:
srinivasan - stockholm,சுவீடன்
17-செப்-202018:09:20 IST Report Abuse
srinivasanபாமரன் கூவறான்....
Rate this:
Cancel
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
17-செப்-202011:24:59 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy Atal அதல் என்றால் "உறுதியான நோக்கு" (Resolute) மன உறுதி என்று பொருள் . நாட்டின் எல்லா எல்லைகளையும் இணைக்கும் Golden Quadrilateral என்ற பலவழிச்சாலைகளை வஜ்பேயி பிரதமராக இருந்த பொழுது துவக்கினார். அதல் பிஹாரி அவரது பெயராகும் வஜ்பேயி குலப்பெயராகும் பொருத்தமான பெயரே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X