தொடக்கக் கல்வி பட்டய தேர்வுஇணையதளத்தில் ஹால் டிக்கெட்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடக்கக் கல்வி பட்டய தேர்வுஇணையதளத்தில் ஹால் டிக்கெட்

Added : செப் 17, 2020
Share

விழுப்புரம்; தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கான, தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு;செப்., 2020 தொடக்கக்கல்வி பட்டய தேர்வின் முதலாம் ஆண்டு தேர்வுகள் வரும் 21ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலும், இரண்டாம் ஆண்டு தேர்வுகள் வரும் 29ம் தேதி முதல் அக்., 7ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு வருகைபுரியும் தனித்தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் விண்ணப்பித்திருக்கும் தனித்தேர்வர்கள் அனைவரும் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிந்து 15.9.2020 பிற்பகல் முதல் தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தோன்றும் DEE EXAM SEPTEMBER-2020- PRIVATE CANDIDATE-HALL TICKET DOWNLOAD என்பதை கிளிக் செய்தால், தோன்றும் பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X