பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக வாழ்வாதார இயக்க கட்டடம்நிறைமதியில் கலெக்டர் திறப்பு

Added : செப் 17, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; நிறைமதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க கட்டடத்தை கலெக்டர் கிரண்குராலா நேற்று திறந்து வைத்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தில் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த கிராம சேவை மைய கட்டடத்தை, புதுப்பித்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க கட்டடமாக மாற்றியமைக்கப்பட்டு, திறப்பு விழா நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் கிரண்குராலா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கட்டடத்தை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றினார். தொடர்ந்து வளாகத்தின் வெளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர்கள் தேவேந்திரன்(மகளிர் திட்டம்), மகேந்திரன் பி.டி.ஓ.,க்கள் நடராஜன், ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X