சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணத்தை உடனடியாக செலுத்தக் கோரிஅரசு அலுவலகங்களில் நோட்டீஸ்

Added : செப் 17, 2020
Share
Advertisement

ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் வேளாண்மை அலுவலகத்தில் பி.எம்., கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள், உடனடியாக திருப்பி செலுத்தகோரி எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.பி.எம்., கிசான் திட்டத்தில் நடந்த முறைகேட்டினால் விவசாயிகள் அல்லாத பொதுமக்கள் பலர் இத்திட்டத்தில் இணைந்து பயனடைந்தனர்.தற்போது இத்திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளை கண்டறிந்து, நீக்கப்படுகின்றனர். மேலும், பி.எம்., கிசானில் தகுதியற்ற பயனாளிகள்பெற்ற தொகையினை அரசின் வங்கி கணக்கிற்கு மாற்றும் பணி நடந்து வருகிறது.இதில் பலரது வங்கி கணக்கில் பணம் இல்லாததால், அவர்களின் விபரங்களை வங்கிகளிடம் இருந்து பெற்று வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்டவர்களின் வீட்டிற்கேசென்று பணத்தை திருப்பி செலுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரிஷிவந்தியத்தில் உள்ள வி.ஏ.ஓ., மற்றும் ஊராட்சி மன்றஅலுவலகங்களில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.அதில், பி.எம்., கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நியாயமாக வழங்ககூடிய ஊக்கதொகையினை விவசாயி அல்லாதவர்கள் மற்றும்விவசாயக் குடும்பத்தில் ஒருவருக்கு மேல் ஊக்கதொகை பெற்றவர்கள், தாங்கள் பெற்ற தொகை முழுவதையும் அவரவர் வங்கி கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில்குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X