ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தல்

Added : செப் 17, 2020
Share

திண்டிவனம்; மரக்காணத்தில் இருந்து திண்டிவனத்திற்கு ஆட்டோவில் 513 கிலோ ரேஷன் அரிசி கடத்திய மூவரை வட்ட வழங்கல் அதிகாரிகள் கைது செய்து, அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.மரக்காணத்தில் இருந்து திண்டிவனம் வழியாக ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வட்டவழங்கல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் கலெக்டர் உத்தரவின் பேரில், வட்ட வழங்கல் அதிகாரி ஜெயலட்சுமி வருவாய் ஆய்வாளர் சித்தார்த் ஆகியோர் நேற்று இருதயபுரம் சந்திப்பில் ஆட்டோக்களை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மூட்டை மூட்டையாக ஏற்றி வந்த ஆட்டோவை மடக்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அதில், 513 கிலோ அரிசி கடத்தப்படுவது தெரிய வந்தது.இதையடுத்து அதிகாரிகள் அவர்களிடம்நடத்திய விசாரணையில், மரக்காணம் அடசல் கிராமத்தை சேர்ந்த அரிதாஸ் மனைவி மஞ்சுளா, 45; அய்யப்பன், 40;ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார் மகன் அருள்குமார், 25; ஆகியோர் என்பதும், மரக்காணம் அடசல் கிராமத்தில் இருந்து513 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை திண்டிவனம் அடுத்த அகூர் கிராமத்தில் கடைகளில் விற்பனை செய்ய கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, வட்ட வழங்கல் அதிகாரிகள் அந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, திண்டிவனம் தமிழ்நாடு நுகர்வோர் பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ மற்றும் மூவரையும், விழுப்புரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X