சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பு.கொணலவாடியில் குடிநீர் தட்டுப்பாடு காலி குடங்களுடன் மக்கள் போராட்டம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

உளுந்தூர்பேட்டை; பு.கொணலவாடி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் காலி குடங்களுடன் அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பு.கொணலவாடி கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய 3 குடிநீர் மேல் தேக்க தொட்டி உள்ளது. ஒரு மேல்நிலை தேக்க தொட்டி மூலம் ஒரு பகுதிக்கு மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.மற்ற இரு மேல்நிலை தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்கான மின் மோட்டார் பழுதாகியுள்ளது.இதனால் பிள்ளையார் கோயில் தெரு உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட தெரு பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர்ப் பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 7 :00 மணி அளவில் காலி குடங்களுடன் பிள்ளையார் கோயில் அருகே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த உளுந்தூர்பேட்டை பி.டி.ஒ., பன்னீர்செல்வம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து காலை 8. 20,மணியவில் மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X