பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி அதிகாரிகளுக்கு பிரிவு உபசார விழா

Added : செப் 17, 2020
Share
Advertisement

கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் இந்தியன் வங்கி மேலாளர், துணை மேலாளர் ஆகியோருக்கு பிரிவு உபசார விழா நடந்தது.கண்டாச்சிபுரம் இந்தியன் வங்கியில் பணிபுரிந்த மேலாளர் இரத்தின சவுபாக்கியவதி மற்றும் துணை மேலாளர் அப்துல் வகாப் ஆகியோருக்கு பிரிவு உபசார விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு புதிய மேலாளர் சந்தீப் தலைமை தாங்கினார். புதிய துணை மேலாளர் ஹரிஹரசுதன் முன்னிலை வகித்தார். நகைமதிப்பீட்டாளர் சிவக்குமார் வரவேற்றார்.நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வங்கி ஊழியர்கள் இரத்தின சவுபாக்கியவதி மற்றும் அப்துல் வகாப் ஆகியோரின் பணிகள் குறித்து பேசினர்.இதில் வங்கி ஊழியர்கள் சுப்ரமணியன்,விஜய் நடராஜ்,சிவக்குமார், தினேஷ்,மூர்த்தி,குப்பன், விமலா மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள்,மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், வியாபாரிகள் உள்படண பலர் கலந்துகொண்டனர். வங்கியின் காசாளர் கரண் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X