கள்ளக்குறிச்சியில் முக கவசம் அணியாத115 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் முக கவசம் அணியாத115 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

Added : செப் 17, 2020
Share

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் முக கவசம் அணியாமல் சென்ற 115 நபர்களுக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை நடத்தினர்.

கள்ளக்குறிச்சியில் கொரோனா பரவலின் வேகத்தை குறைக்கும் வகையில், நகராட்சி அதிகாரிகள் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர்.இந்நிலையில் கொரோனா பரவலின் வேகம் கட்டுகடங்காததால், சுகாதாரத்துறையினர் அபராதம் விதிக்கும் நடைமுறையை கையில் எடுத்தனர். நேற்று நான்கு முனை சந்திப்பு பகுதியில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டதுடன், கொரோனா பரிசோதனையும் நடத்தினர்.

வட்டார மருத்துவ அலுவலர் பங்கஜம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம், சுகாதார ஆய்வாளர் சிட்டிபாபு, பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேஷ், விக்னேஷ்வரன், வசந்தன், ஆய்வக நுட்புணர் புவனேஷ்வரி, நகராட்சி கமிஷனர் பாரதி, துப்புரவு ஆய்வாளர் செல்வக்குமார், துாய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பரிமளா, வருவாய் உதவியாளர்கள் ராஜி, முருகன், கில்டாரோஷின், செழியன், விஜயலட்சுமி ஆகியோர் பணிகளில் ஈடுபட்டனர்.நேற்று முக கவசம் அணியாமல் சென்ற 115 பேருக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா உமிழ்நீர் பரிசோதனை நடத்தினர். நகராட்சி அதிகாரிகள் 53 பேரிடமிருந்து ரூ.10 ஆயிரத்து 600 அபராதம் வசூலித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X