பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி பகுதியில் அண்ணாதுரை பிறந்த நாள்

Added : செப் 17, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அ.தி.முக.., தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.திருக்கோவிலூர் ஒன்றிய, நகர அ.தி.மு.க., சார்பில் நகர செயலாளர் சுப்பு வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் பழனி, சேகர், சந்தோஷ் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அ.ம.மு.க., சார்பில் நகர செயலாளர் இளவரசன் தலைமையில், கட்சியினர் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர். நகர துணை செயலாளர் சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் பார்த்திபன், வேலு, ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் ஆபிரகாம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அண்ணாதுரை சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.சின்னசேலம் : தி.மு.க., சார்பில் அண்ணாதுரை உருவப்படத்திற்கு நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு பிரியாணி, இனிப்புகள் வழங்கப்பட்டன.திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஒன்றிய, நகர தி.மு.க., சார்பில் கட்டை கோபுரம் அருகே உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொகுதி பொறுப்பாளர் முருகன், ஒன்றிய செயலாளர் தங்கம் தலைமை தாங்கினர்தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர செயலாளர் கோபி, நிர்வாகிகள் குணா, மணி, கோவிந்து, லதாசரவணன், கலைவாணிசக்திவேல், பிரகாஷ், அண்ணாதுரை, நவநீதகிருஷ்ணன், ராமு. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.தியாகதுருகம்: தியாகதுருகம் ஒன்றிய தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில் வடக்கு மற்றும் தெற்கு தி.மு.க., சார்பில் நடந்த விழாவிற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் அவைத் தலைவர்கள் நூர் முகமது, சாமிதுரை, துணை செயலாளர் அண்ணாதுரை, நிர்வாகிகள் மலையரசன், இளங்கோவன், பெருமாள், மணி, அப்துல் கபூர், நெடுஞ்செழியன், பாலு, கருணாநிதி, சண்முகம், கலியன், அமுதா தட்சணாமூர்த்தி, சங்கர், சிவக்குமார், சிவ வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.உளுந்தூர்பேட்டை:தி.மு.க.,ஒன்றிய, நகரம் சார்பில் ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல்ராஜ் இனிப்புகள் வழங்கினர். மாஜி எம்.எல்.ஏ., திருநாவுக்கரசு, நிர்வாகிகள் விஜயகுமார், செல்லையா, அருண்ராஜ், குருமனோ,குருராஜ், தனஞ்செழியன், ரவி. ஐயப்பன், ஜெயக்குமார், ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X