வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

Added : செப் 17, 2020
Share

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வர பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று காலை 9:00 மணிக்கு, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு, மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், 5:30 மணிக்கு, நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் நடந்தது.6:00 மணிக்கு ஓம் நமச்சிவாயகோஷம் முழங்க வீரட்டானேஸ்வரர், நந்திகேஸ்வரர் பெருமானுக்கு தீபாராதனை நடந்தது.பிரதோஷ நாயகர்களுக்கு தீபாராதனை, ஸ்ரீ ருத்ரம், திருவாசகம் முழங்க ஆலயம் வலம் நடந்தது.இதில் பக்தர்கள் பலரும் தனிமனித இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X