பொது செய்தி

தமிழ்நாடு

செல்லபிராட்டி ஏரியில் மண் எடுக்க எதிர்ப்பு

Added : செப் 17, 2020
Share
Advertisement

செஞ்சி; செல்லபிராட்டி ஏரியில் இருந்து சாலை விரிவாக்கத்திற்கு மண் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மண் எடுக்கும் பணியை பாதியில் நிறுத்தப்பட்டது.கடந்த 7 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை விரிவாக்க பணி கடந்த மூன்று மாதமாகமீண்டும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக செஞ்சியில் பைபாஸ் அமைத்து வருகின்றனர். இதற்காக செல்லபிராட்டி கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஏரியில் அனுமதி பெற்று மண் எடுத்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக மண் எடுத்து வந்த நிலையில் நேற்று நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையில் ஈடுபட்டனர்.குறிப்பிட்ட அளவிற்கும் அதிகமாக ஆழம் எடுப்பதாகவும், ஏரியின் மையத்தில் மண் எடுப்பதால் ஏரியில் மதகின் அருகே தண்ணீர்செல்வது தடை படும் என்றும் புகார் கூறினர். பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கனகராஜ், வளத்தி இன்ஸ்பெக்டர்கலைச்செல்வி மற்றும் ஒப்பந்த நிறுவனத்தின் அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பொது மக்கள் சமாதானம் ஆகாமல் செஞ்சி தாசில்தாரிடம் புகார் செய்தனர். இதையடுத்து மண் எடுக்கும் பணி நேற்று நிறுத்தப்பட்டது. இன்று கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X