பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று நடும் விழா

Added : செப் 17, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்ட சுற்றுச்சூழல் ஓசோன் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தேசிய பசுமை படை சார்பில் உலக ஓசோன் தின விழா நடந்தது.வளவனுார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் ஓசோன் பாதுகாப்பு இயக்க தலைவர் ராமன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை இளமதி வரவேற்றார். எஸ்.பி., ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு சிறப்புரையாற்றினார்.மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன், ஓசோன் பாதுகாப்பு இயக்க நிர்வாகி கதிர்வேல், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.அப்போது, ஓசோன் பாதுகாப்பு இயக்க பொருளாளர் ராசையன், செ.குன்னத்துார் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை ேஹமலதா, ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X