பொது செய்தி

தமிழ்நாடு

மலைக்குறவன் சாதி சான்றிதழ் கேட்டுஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மக்கள் தர்ணா

Added : செப் 17, 2020
Share
Advertisement

விழுப்புரம்; இந்து மலைக்குறவன் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள், தங்களின் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் நகராட்சி சாலாமேடு பகுதியில், 30 குடும்பங்களைச் சேர்ந்த மலைக்குறவர் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள குடும்பங்களில் இருந்து 23 பேர் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படித்து வருகின்றனர்.இவர்கள், தங்களுக்கு இந்து மலைக்குறவன் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கடந்த 5 ஆண்டுகளாக, விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு கொடுத்து வருகின்றனர்.ஆனால், இதுவரை சாதி சான்றிதழ் வழங்கவில்லை. இதனால், மாணவர்கள் மேற்படிப்பு தொடர முடியவில்லை என்றும், அரசு உதவிகள் பெற முடியவில்லை எனக்கூறி மலைக்குறவர் சமுதாய மக்கள் தங்களின் குழந்தைகளுடன் நேற்று மதியம் முதல் இரவு வரை ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X