இந்தியா

மலிவு விலையில் அரிசி, கோதுமை: பா.ஜ., தலைவர் சாமிநாதன் உறுதி

Added : செப் 17, 2020
Share
Advertisement

புதுச்சேரி; 'புதுச்சேரியில் 2021ம் ஆண்டில் பா.ஜ., ஆட்சி மலரும்போது, ரேஷன் கடைகளை திறந்து மலிவு விலையில் அரிசி, கோதுமை, உப்பு வழங்கப்படும்' என, அக்கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் பேசினார்.

காங்., கட்சியை சேர்ந்தவர்கள் பா.ஜ.,வில் இணையும் விழா, இளங்கோ நகரில் உள்ள நகர மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவில் உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த கல்வியாளர் பிரபு என்கிற அன்துவான் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் காங்., கட்சியில் இருந்து விலகி, பா.ஜ., தலைவர் சாமிநாதன், சங்கர் எம்.எல்.ஏ., நகர மாவட்ட தலைவர் வக்கீல் அசோக்பாபு ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களை வரவேற்று சாமிநாதன் பேசுகையில், 'பிரதமர் மோடியின் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை புதுச்சேரியில் செயல்படுத்துவோம். மூடப்பட்டுள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்து, வேலை இழந்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும் மீண்டும் வேலை வழங்குவோம்.மேலும், ரேஷன் கடைகளில் 2 ரூபாய்க்கு அரிசி, 3 ரூபாய்க்கு கோதுமை வழங்குவோம். இதுமட்டுமல்லாமல், மக்கள் பயனடையும் வகையில் மலிவு விலையில் உப்பு, மளிகை பொருட்களும் வழங்கப்படும்' என்றார்.விழாவில் பொதுச் செயலர் செல்வம், நகர மாவட்ட பொறுப்பாளர் ரத்தினவேலு, உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் மகேஷ், இளைஞரணி பொதுச் செயலர் வேல்முருகன், வர்த்தகரணி பாலாஜி, வெற்றிச்செல்வம், நகர மாவட்ட துணைத் தலைவர் விஜயரங்கம், செயலர்கள் ஜெயக்குமார், விஜய், சிறுபான்மையினர் அணி பொதுச் செயலர் சார்லஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X