இந்தியா

பெண்கள், குழந்தைகள் ஒருங்கிணைந்த

Added : செப் 17, 2020
Share
Advertisement
 பெண்கள், குழந்தைகள்  ஒருங்கிணைந்த

புதுச்சேரி; வெங்கடேஸ்வரா நகரில் பெண்கள், குழந்தைகளின் ஒருங்கிணைந்த சேவை மைய கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாவட்டந் தோறும், ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றிணைந்த சேவை மையம் (ஒன் ஸ்டாப் சென்டர்) தற்காலிகமாக ராஜிவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் துவங்கப்பட்டது. புதிய கட்டடம் கட்டுவதற்கான நிதி ரூ. 37 லட்சம் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் வழங்கப்பட்டது.அதனையொட்டி, ஒன்றிணைந்த சேவை மைய கட்டடத்திற்கு முதல்வர் நாராயணசாமி கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார்.இம்மையத்திற்கான கட்டடம் தேசிய கட்டட கட்டுமானக் கழகம் மூலம் கட்டி முடிக்கப்பட்டு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைவசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இக்கட்டடத்தை முதல்வர் நாராயணசாமி சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி ஹாலில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.நல அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்தார். ஜான்குமார் எம்.எல்.ஏ., நலத்துறை செயலர் ஆலிஸ்வாஸ், துறை இயக்குநர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த மையத்தின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, மருத்துவ உதவி, பெண்கள் காவல்துறையில் புகார் கொடுக்க உதவுதல், சட்ட உதவி மற்றும் மனநல ஆலோசனை, தற்காலிக தங்கும் வசதி அளிக்கப்படவுள்ளது.இம்மையத்தில் ஆதரவற்ற நிலையில் மீட்கப்படும் பெண்களை, ஐந்து நாட்கள் வரை தங்க வைத்து, தேவையான உதவிகள் செய்யப்படும். இம்மையத்தின் மூலம் மத்திய, மாநில அரசு திட்டங்களின் ஒன்றிணைந்த சேவை கிடைக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X