இந்தியா

மத்திய அரசு மீது குறை கூறுவதா காங்., அரசுக்கு பா.ஜ., கண்டனம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

புதுச்சேரி;பாசிக், பாப்ஸ்கோ நிறுவன ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காமல், மத்திய அரசு மற்றும் கவர்னர் மீது காங்., அரசு பொய் குற்றச்சாட்டு கூறுவதை பாஜ., கண்டிக்கிறது. இதுகுறித்து மாநில பொதுச் செயலர் செல்வம் விடுத்துள்ள அறிக்கை:அரசு சார்பு நிறுவனமான பாசிக் ஊழியர்களுக்கு 70 மாதமும், பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு 36 மாத சம்பளமும் வழங்கப்படவில்லை. மேலும், நிர்வாகத்தை மீண்டும் நடத்த கோரி கடந்த ஏழு நாட்களாக சட்டசபை முன் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.இரண்டு நிறுவனங்களும் கடந்த காலங்களில் நல்ல லாபத்தில் இயங்கி வந்தது. கடந்த 20 ஆண்டு காலமாக காங்., மேற்கொண்ட தவறான கொள்கை மற்றும் முடிவுகளால் இரு நிறுவனமும் இழப்பை சந்தித்து வருகிறது.மத்திய அரசு மானியமாக வழங்கிய தொகையை காங்., அரசு தனது குடும்ப உறுப்பினருக்கு மாற்றிவிட்டு, மத்திய அரசையும், கவர்னரையும் குறை கூறி கொண்டிருக்கிறது.இரு நிறுவனத்திற்கும் வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்காத காங்., அரசு, மத்திய அரசு மற்றும் கவர்னர் மீது பொய் குற்றச்சாட்டு கூறுவதை பாஜ., வன்மையாக கண்டிக்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X