இந்தியா

துவக்கம்: ரூ.5.50 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி பணி ... 41 இடங்களில் மிதிவண்டி பகிர்வு நிலையம்

Added : செப் 17, 2020
Share
Advertisement
 துவக்கம்:  ரூ.5.50 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி பணி ... 41 இடங்களில் மிதிவண்டி பகிர்வு நிலையம்

புதுச்சேரிக்கு ஸ்மார்ட் சிட்டியை உருவாக்க மத்திய அரசு கடந்த 2017ல் அனுமதி கொடுத்தது. இதன்படி புதுச்சேரி நகர பகுதியில் 1468 ஏக்கர் பரப்பளவில் ரூ. 1,828 கோடி திட்ட மதிப்பீட்டில் பணிகள் நடக்க வேண்டும்.

கடந்த நிதியாண்டு மத்திய அரசு ரூ.103 கோடியும், மாநில அரசு பங்களிப்பாக ரூ. 60 கோடி ஒதுக்கீடு செய்தும் பணிகள் நடைபெறவில்லை.இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி நகர வளர்ச்சி கழகம் மூலம் பல்வேறு திட்ட பணிகளை விரைந்து முடிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது .முதற்கட்டமாகரூ.5.50 கோடி செலவில் 41 இடங்களில் மிதிவண்டி பகிர்வு நிலையம்,10 நவீன கழிப்பறைகள், பொது கழிவறைகளை மேம்படுத்தல், 5 நடமாடும் கழிப்பறைகள் துவக்கம் என 4 திட்டங்களின் தொடக்க விழா காந்தி திடலில் நேற்று நடந்தது.அமைச்சர் நவச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்,

விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமிநாராயணன், அன்பழகன், ஜெயமூர்த்தி, தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், கலெக்டர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இது மட்டுமின்றி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் ஒப்பந்த புள்ளி கோரப்படும் நிலையில் உள்ள பணிகள்:ரூ. 12 கோடி செலவில் அண்ணா திடலில் ஓடுபாதை, பல்நோக்கு திடல் ,வாலிபால், டென்னிஸ், பெத்தாங் ஆடுகளங்கள், குழந்தைகள் விளையாட்டு பிரிவு, முதியோர் உடற்பயிற்சி கூடம், பார்வையாளர் மாடம், விளையாட்டு வீரர்கள் தங்குமிடம், நிர்வாக கட்டடம், கடைகள், வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது.ரூ.17.16 கோடி செலவில் பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள பிரிவினருக்கு சின்னையாபுரத்தில் 220 குடியிருப்புகளுடன் அடுக்குமாடி கட்டடம்.நகரின் 10 இடங்களில் பல அடுக்கு நான்கு சக்கர வாகன பார்க்கிங் வசதி அமைய உள்ளது. முதற்கட்டமாக ரூ. 6 கோடி செலவில் நேரு வீதி பழைய சிறை வளாகம், மறைமலையடிகள் சாலை அண்ணா சிலை அருகில் மல்டி வெவல் பார்க்கிங் அமைக்கப்பட உள்ளது.

மின்மாற்றிகளை மாற்றி அமைத்தல் மற்றும் அரசு கட்டடங்களில் மேல் தளத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம் ரூ.16.93 கோடி செலவில் துவங்கப்பட உள்ளது.முத்தியால்பேட்டை, உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார் பேட்டை ஆகிய இடங்களில் சிறிய மற்றும் பெரிய அளவிலான நகராட்சி வாய்க்கால் புதுப்பித்து, மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.அம்மன் குளம், புறா குளம், மரப்பாலம் குளம் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வெள்ள வடி நீர் வாய்க்காலான மேட்டுவாய்க்கால், பள்ள வாய்க்கால், உப்பாறு வாய்க்கால், செல்லான் நகர் வாய்க்கால், ரெயின்போ நகர் வாய்க்கால், கருவடிக்குப்பம் வாய்க்கால், கிருஷ்ணா நகர் வாய்க்கால் கட்டுதல், சுதாகர் நகர், கம்பன் நகர், பொன் நகர் அருகில் சிறிய பாலம் கட்ட என மொத்தம் 19 பணிகள் ரூ. 106 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட உள்ள திட்டங்கள்.புதுச்சேரி கடற்கரையில் பழைய துறைமுகத்தில் இருந்து புதிய கலங்கரை விளக்கம் வரை நடைபாதை அமைத்து அழகுப்படுத்துவது.

கலவை சுப்ராய கல்லுாரி, வ.உ.சி.., பள்ளி, பிரெஞ்சு பள்ளி உள்ளிட்ட பாரம்பரிய அரசு கட்டடங்களை புனரமைத்தல்.குபேர் அங்காடியை 50 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட வணிக வளாகமாக மேம்படுத்துவது.துறைமுகத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்துவது.பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காக குமரகுருபள்ளம், திடீர் நகர், ஆட்டிப்பட்டி, துப்ராயப்பேட்டை பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X