தவளக்குப்பம் சந்திப்பில் விபத்து அபாயம் பழுதான சிக்னல் விளக்கு சீரமைக்கப்படுமா?| Dinamalar

இந்தியா

தவளக்குப்பம் சந்திப்பில் விபத்து அபாயம் பழுதான சிக்னல் விளக்கு சீரமைக்கப்படுமா?

Added : செப் 17, 2020
Share

பாகூர்; புதுச்சேரி - கடலுார் சாலை தவளக்குப்பம் பஸ் நிறுத்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விபத்து எச்சரிக்கை விளக்கு, பழுதடைந்துள்ளதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது

.புதுச்சேரி -கடலுார் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. வாகன போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் சாலையில் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது.விபத்துக்களை தடுக்கும் நோக்கில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி முதல் தவளக்குப்பம் அடுத்துள்ள இடையார்பாளையம் சந்திப்பு வரை எல்.இ.டி., மின் விளக்குகள் அமைக்கப்பட்டது.அதன்பின், அரியாங்குப்பம் சிக்னல் முதல் டோல் கேட் பகுதி வரை ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த சி.எப்.எல்., மின் விளக்குகள், எல்.இ.டி., மின் விளக்குகளாக மாற்றப்பட்டது.அதனை தொடர்ந்து, முக்கிய சாலை சந்திப்புகளான கன்னியக்கோவில், கந்தன்பேட், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம், சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் சூரிய மின் சக்தியின் மூலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு ஒளிரக்கூடிய தானியங்கி எச்சரிக்கை விளக்குகள் அமைக்கப்பட்டது.மஞ்சள் நிற வண்ணத்தில் விட்டு விட்டு எரியும் இந்த விளக்கு, வாகன ஓட்டிகளுக்கு எச்சரிகை விடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில், தவளக்குப்பம் பஸ் நிறுத்தம் பூரணாங்குப்பம் சாலை சந்திப்பில், மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை விளக்கு கடந்த ஆண்டு பழுதானது.இதுநாள் வரை சரி செய்யப்படாமல் உள்ளதால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, தவளக்குப்பம் பஸ் நிறுத்தம் பூரணாங்குப்பம் சாலை சந்திப்பில் பழுதான நிலையில் உள்ள விபத்து எச்சரிக்கை விளக்கினை உடனடியாக சரி செய்திட சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X