இந்தியா

சுகாதார ஊழியர்கள் சங்க செயற்குழு கூட்டம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரி சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளன செயற்குழு கூட்டம் அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது. சம்மேளன துணைத் தலைவர் வெற்றிவேல் வரவேற்றார். தலைவர் கீதா தலைமை தாங்கினார். பொதுச் செயலர் முனுசாமி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் பால மோகனன், அமைப்பு செயலர் கிறிஸ்டோபர் மற்றும் சுகாதார ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளன கவுரவத் தலைவர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு மீது பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்காமல் காலம் கடத்தும் சுகாதார இயக்குனரை கண்டிப்பதோடு, உடனடியாக உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த சுகாதார செயலருக்கு கடிதம் வழங்குவது. பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்காவிட்டால், அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் கோரிக்கைகளை விளக்கும் வகையில், சம்மேளன பொறுப்பாளர்கள் குழுக்களாக சென்று துண்டுப்பிரசுரங்கள் வழங்கி ஆதரவு திரட்டுவது. வரும் 23 ம் தேதி அனைத்து மருத்துவமனைகளிலும் வாயிற் கூட்டம் நடத்துவது, 30ம் தேதி ஒரு மணி நேர வெளிநடப்பு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அமைப்பு செயலர் ஜெகநாதன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X