இந்தியா

இடுபொருட்கள் பயன்பாடு செயல் விளக்க முகாம் 

Added : செப் 17, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கரியமாணிக்கம் உழவர் உதவியகம் ஆத்மா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இடுபொருள் பயன்பாடு குறித்த செயல்விளக்க முகாம் மொளப்பாக்கம் கிராமத்தில் நடந்தது.முகாமிற்கு, வேளாண் கூடுதல் இயக்குனர் வசந்தகுமார் தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு காய்கறி மற்றும் வாழை நுண்ணுாட்டசத்து கலவை பயன்பாடு குறித்து விளக்கினார். துணை இயக்குனர் சந்தான கிருஷ்ணன் ஆத்மா செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.பாகூர் உழவர் உதவியகம் துணை இயக்குனர் ராஜேஸ்வரி நுண்ணுாட்டசத்துகளின் தேவைகள் குறித்து விளக்கினார். ஆத்மா துணை திட்ட இயக்குனர் கலைச்செல்வி ஆத்மா புதிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். வேளாண் அலுவலர் சிவக்குமார் செயல்விளக்கம் செய்து காண்பித்தார்.முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு நுண்ணுாட்டசத்து இடுபொருட்கள் வழங்கப்பட்டது. முகாமில் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை களப்பணியாளர் பன்னீர், வெங்கடாசலம், ரங்கநாதன், லட்சுமிநாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்.ஆத்ம திட்ட மேலாளர் பக்தவச்சலம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X