இந்தியா

ஆடிட்டருக்கு மிரட்டல் டாக்டர் மீது வழக்கு பதிவு

Added : செப் 17, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கடன் தகராறில் ஆடிட்டருக்கு மிரட்டல் விடுத்த டாக்டர் மீது இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, சத்தியா நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன்.42; ஆடிட்டர். இவரிடம் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் கோபிநாத்,40; ஒரு லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.பணத்தை சந்திரசேகரன் திரும்ப கேட்டபோது அவர் பணத்தை தர முடியாது என ஆபாசமாக திட்டியுள்ளார்.மேலும், ரவுடிகள் மூலம் தீர்த்து கட்டிவிடுவேன். ் ஆரோவில்லில் இறந்த ரவுடி பூபாலன், மணிகண்டன் கூட்டாளிகள் மூலம் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் சந்திரசேகரின் கார் பதிவெண் குறித்து விசாரித்துள்ளார்.இதுகுறித்து சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார், டாக்டர் கோபிநாத் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X