இந்தியா

மாணவர்களுக்கு அரிசி, பணம் சபாநாயகர் துவக்கி வைப்பு

Added : செப் 17, 2020
Share
Advertisement

புதுச்சேரி; லாஸ்பேட்டை அரசு பள்ளிகளில் மதிய உணவுக்கு பதிலாக அரிசி, ரொக்கப்பணம் வழங்கும் திட்டத்தை சபாநாயகர் துவக்கி வைத்தார்.லாஸ்பேட்டை சட்டசபை தொகுதியில் கொரோனா காலத்தில் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க முடியவில்லை.இதனால் தேசிய உணவு சட்டப்படி மதிய உணவிற்கு பதிலாக ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி மற்றும் 290 ரூபாய், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி மற்றும் 390 ரூபாய் வழங்க ஆவண செய்யப்பட்டுள்ளது.இதில் முதற்கட்டமாக நேற்று லாஸ்பேட்டையில் உள்ள கோலக்கார அரங்கசாமி நாயக்கர் நடுநிலை பள்ளி, பெத்துச்செட்டிபேட்டையில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி மற்றும் ஜீவானந்தபுரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவிற்கு பதிலாக தலா 4 கிலோ அரிசி மற்றும் 290 ரூபாய் வழங்கும் திட்டத்தை சபாநாயகர் சிவக்கொழுந்து துவக்கி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X